Wednesday, September 12, 2012

காவாலித்துறை - 2

நான் சுடப்போவது யார்?
- எனக்கு தெரியாது...

அவனுக்கும் எனக்கும் பிரச்சனை?
- எதுவும் கிடையாது...

அவனுக்கும் இந்த போராட்டத்திருக்கும் என்ன தொடர்பு?
- எதுவோ தெரியாது...

அவன் இறந்தால், அவன் குடும்பம் என்னவாகும்?
- அதை பற்றி யோசிக்க கூடாது...

நிச்சயமாக அவன் பெரிய அரசியல்வாதியல்ல,
பெரும் பண முதலாளியுமல்ல,
தினமும் உழைத்து சோறு தின்பவன் போல் தான் இருக்கிறான்...

இந்த கொலையை கணக்கில் கொள்ள கடவுள்களும்  இல்லை,
அவன் பேயாக வந்து என்னை பழிவாங்கபோவதும்  இல்லை...
என்ன, விசாரணை கம்மிச்சனோடு சிறுது நேரம் செலவழிக்க வேண்டும்...

இதோ அரசின் தோட்டா இருக்கிறது,
உயர் அதிகாரியின் ஆணை இருக்கிறது,
சுடுகிறேன்...