Saturday, July 25, 2009

சென்னை அருங்காட்சியகம்


உறவினர் ஒருவரை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திற்கு மாலை 4:30 க்கு(24 July 2009), சென்றிஇருந்தே... அங்கு சென்ற பின் அவர் வர 6 மணி யாகும் என அறிந்தேன்...

என் தோள் பையில் கமெரா இருபது நியாபகம் வந்தது..

சாடல்னு வண்டியை எடுத்துட்டு...

தாடால்னு "Pantheon" சாலைக்கு திருப்பியிடு...

பாடால்னு சென்னை அருங்காட்சியகத்திற்குள் நுளையிந்துவிட்டேன்....

அங்கு வண்டியை நிறுத்திவிட்டு (3 ரூபாய் கப்பம் கெட்டிவிட்டு), உள்ளே நடந்து சென்றேன். ஒரு கட்டிடம் அருகில் "காட்சியாகதுக்குள் நுழைய நுழைவு சீட்டு, அருங்காட்சியகத்தின் வாயில் கதவின் அருகில் கிடைக்கும்" என்று எழுதியிருந்தது...

"அடடனு" எனக்குள்ளேயே சொல்லிவிட்டு... வாயில் கதவை நோக்கி நடந்தேன்...

சீட்டு வழங்கும் அறை பூட்டியிருந்தது... என்ன என்று காவலரிடம் விசாரிக்க

" ஆஞ்சி மணிக்கு எல்லாம் க்ளோஸ் சார்.. இனிமேல் எல்லோரையும் வெளியில் அனுபிவிடுவோம்...." என்றார்... என் கைகடிகாரத்தில் மனிப்பர்தேன், மணி சரியாக ஐந்து ஐந்து ...

போங்க டா கட்டிடத்திற்கு உள்ளே போய்தானே படம் எடுக்க விட மாட்டிங்க....

அந்த கட்டிடத்தையே படம் எடுத்தா? என்று என் மூளை வேலை செய்ய....

அங்குஇருந்த இரண்டு கட்டிடத்தை 48 முறை என் கேமரா கொண்டு சுட்டு வீழ்த்தினேன்... அதில் இருந்து 3 படங்களை [நல்ல வந்த படங்கள் / எனக்கு பிடித்த படங்கள் ] கீழே காண்க...

[படத்தின் மேல் சொடுக்கி படத்தை பெரிதாகா காண்க]




Sunday, July 19, 2009

காவாலித் துறை...



பல நாள்கள் ஏதாவது, வலை பூவில் எழுதிவிடவேண்டும் என்று எண்ணி இருந்தேன், இன்று தான் ஒன்று எழுத கிடைத்தது...

ஏதாவது நல்ல புகை படம் எடுக்கலாம் அல்லது சிறுது நேரம் கடற்கரை காற்று வாங்கி வரலாம் என்று எண்ணி இன்று (19, July 2009), மதியம் மெரினா கடற்க்கரைக்கு என் காமெராவை எடுத்துக்கொண்டு சென்றேன். அங்கு சிறுவன்(ஷாநவாஸ்) ஒருவன் பட்டம் விற்று கொண்டிருக்க கண்டேன், பல

நிறங்களில் பட்டம் இருந்தது, அதை வரிசையாக மணலில் நிறுத்தி இருந்தான், எனக்கோ அதை புகைபடம் எடுக்கவேண்டும் என்று எண்ணம் தோன்றியது... அவனிடம் பேச்சு கொடுத்து படம் எடுக்கலாம் என்ற எண்ணத்தோடு நான் அவனிடம் ஊரையாடிநேன்..

நான்: "தம்பி காத்தாடி என்ன வில?" என்று வினவினேன்...
அவன்: "பத்து ரூபா..."
நான்: "காத்தாடி எல்லாம் வேண்டாம்..
இந்த காத்தாடிகளை போட்டோ எடுத்துக்கிறேன்..."
அவன்: "போடோதானே.. எத்தனை வேணும்னாலும் எடுத்துகோங்க.. "
(
ஓரிரு படம் எடுத்த பிறகு..)

நான்: "ஸ்கூலுக்கு நீ போகலையா டா?"
அவன்: "போறேன் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறேன்.."
நான்: "எந்த ஸ்கூல் ல படிக்கிற?"
அவன்: ........................................(எதோ பள்ளி பெயர் சொன்னான்... நியாபகம் இல்லை)

[அப்போது சுண்டல் பையன் ஒருவன் அங்கு வர(அது ஷாநவாஸ்இன் நண்பன், 6 ஆம் வகுப்பு படிக்கிறான், விடுமுறை தினங்களில் சுண்டல் விற்கிறான், இவன் பெயர் கேட்க மறந்துவிட்டேன்..), ஷாநவாஸ்கு ஒரு பொட்டலம் சுண்டல் கொடுக்கிறான்...]

சுண்டல் பையன்: "அண்ணே, சுடல் வாங்கிகோங்க..."
நான்: "வேண்டாம்பா"
அவன்: "அண்ணே அவன் சும்மா கொடுப்பான்... வாங்கிகோங்க.."
நான்: "அதுல வேண்டாம்பா..."
அவன் (சுண்டல் பையனிடம்): "டேய் கொடுடா..." (அந்த பையன் சிறுது தயங்க....) "நான் காசு கொடுக்கிறேன்.. அவருக்கு சுண்டல் கொடுடா "
நான்: (அவன் காட்டிய விருந்தோம்பலில் விளைவாக...) "சரி டா நான் வாங்கிக்கிறேன்..."(5 ரூபா கொடுத்து வாங்கினேன்..)

[சுண்டல் பையன் அவன் வேலையை பார்க்க போய்ட்டான்.....]

பிறகு அவனோடு உட்காந்து அவன் வைத்துஇருந்த சாம்பிள் பட்டம் எடுத்து நான் காற்றில்
விட்டுகொண்டே அவனிடம் பேசிகிட்டு இருந்தேன்...

கடற்கரையில் காற்று எல்லை அதனால் பட்டம் சரியாக பறக்கவில்லை என்று சலித்துக்கொண்டான்...

நான் சுதந்திர தினத்தன்று வந்தேன் என்றல், என்னை கடலுக்கு அவன் வீட்டு படகில் கடலுக்கு அழைத்து செல்வதாக சொன்னான்....

கடலில் இருந்து கரை நோக்கி வீசும் காற்று "தொண்டை காற்று" என்றம்..

அது குளிராக இருக்கும் என்றும்.. அதுதான் இப்போது வீசுகிறது என்றும்...

அதனால் பட்டம் உயரே பறக்கவில்லை என்றான்...

தென் திசையை நோக்கி "அங்கிஇருந்து வீசும் காற்று வடக்கு காத்து... அது வந்தா நாலா இருந்கும்..." என்றான்...

எது என்னோட ஏரியா, நீங்க லீவு நாலா வந்த என்ன இங்க பார்க்கலாம்....



இப்படி 15 நிமிடங்கள் கழிய... தீடிர் என என் நண்பர் ஒருவனை பார்க்க அவனிடம் பேச நான் சிறுதூரம் தள்ளி போயி இருந்தேன்.....

அப்போது ஒரு காவலர் ஒரு தடியோடு எங்களை கடந்து சென்றார்... ஏதோ சுற்று காவல் என நினைத்து நாங்கள் பெருசா எதுவும் கண்டுகாமல் பேசி இருந்தோம்... அந்த காவல் துறை நாய் கவ்வ சென்றது அந்த பட்டங்களை என்று நான் அப்போது அறியவில்லை...

அந்த காவலர் நேராக போய், ஷாநவாஸ்இன் காலில் தன் தடியால் ஒரு தட்டுதட்டிவிட, அவனோ பயத்தில் ஓட, இவர் பொறுமையாக, அங்கு வைக்கபட்டுஇருந்த ஒவ்வரு பட்டத்தையும் தடியால் அடித்து சிதைத்தார்... பின்பு ஷாநவாசை அழைத்து, பையை திறக்க சொல்லி அதில் இருந்த விற்பனைக்காக வைக்க பட்டிஇருந்த 5-6 பட்டங்களையும் கிழித்தார்... நூல்கண்டுகளை எடுத்து மணலில் போட்டு காலால் மிதித்துப் பொதைத்தார்... பின்பு தூரத்தில் தெரிந்த இன்னொரு பட்டம் விற்கும் பையனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..

இது நடந்து முடிந்ததும் நானும் என் நண்பனும் ஷாநவாஸ்இடம் சென்று (எப்படி என்ன பேசுவது என்று மனதில் நினைத்துக்கொண்டு)

"இங்கு பட்டம் விற்க கூடாதுன்னு உனக்கு தெரியாதா?" என்றேன்...

அவனோ,

"இவர இப்போம்தான் முதல பார்க்குறேன்...."
"எனக்கு நஷ்டம் ஒன்னும் இல்லனே...."
"நான் இதுக்கெல்லாம் பயப்படமட்டே..."
"எங்க மாமா Chirman அவர்ட சொல்லி இவர் வேலைய காலி பண்ணிவிடுவே...." என்று வேக வேகமாக பேசிவிட்டு, தொலைவில் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் தன் அண்ணனை பார்க்க சென்றுவிட்டான் ....

இதை எல்லாம் பார்த்துவிட்டு என் ஊருளுந்தில் வீடு திரும்பும்போது என் மனதில் எழுந்த வினாக்கள் ...

- அங்கு பல பஜ்ஜி போண்டா, பலூன், மீன் மற்றும் பல கடைகள் இருந்தும் ஏன் அந்த காவலர் இந்த பட்டம் விற்கும் சிறுவர்களை மட்டும் துரத்த வேண்டும்?

- ஒரு 10meter சுற்றளவில் குறைந்தது நாலு ஜோடிகள், நாலு சுவருக்குள் செய்யவேண்டியதை நாடறிய செய்துகொண்டிருந்தது, இது ஏன் அவர் கண்களில் படவில்லை?

- பட்டம் விற்பது தவறு என்றாலும், சிறுவர்களிடம் தடியை பயன்படுத்துவது எவ்வகையில் நியாயம்?

- நாம் செய்த தவறுக்காக வகுப்பில் வைத்து ஆசிரியர் கண்டிக்கும் போது நமக்கு அவமானமாக இருக்கும், அப்படிஇருக்க பலர் முன் காவலரிடம் அடிபட்ட ஷாநவாஸ்க்கு மனது எவ்வளவு காயம் அடைந்திருக்கும்?