பல நாள்கள் ஏதாவது, வலை பூவில் எழுதிவிடவேண்டும் என்று எண்ணி இருந்தேன், இன்று தான் ஒன்று எழுத கிடைத்தது...
நான்: "தம்பி காத்தாடி என்ன வில?" என்று வினவினேன்...
அவன்: "பத்து ரூபா..."
நான்: "காத்தாடி எல்லாம் வேண்டாம்..
இந்த காத்தாடிகளை போட்டோ எடுத்துக்கிறேன்..."
அவன்: "போடோதானே.. எத்தனை வேணும்னாலும் எடுத்துகோங்க.. "
(ஓரிரு படம் எடுத்த பிறகு..)
நான்: "ஸ்கூலுக்கு நீ போகலையா டா?"
அவன்: "போறேன் ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறேன்.."
நான்: "எந்த ஸ்கூல் ல படிக்கிற?"
அவன்: ........................................(எதோ பள்ளி பெயர் சொன்னான்... நியாபகம் இல்லை)
[அப்போது சுண்டல் பையன் ஒருவன் அங்கு வர(அது ஷாநவாஸ்இன் நண்பன், 6 ஆம் வகுப்பு படிக்கிறான், விடுமுறை தினங்களில் சுண்டல் விற்கிறான், இவன் பெயர் கேட்க மறந்துவிட்டேன்..), ஷாநவாஸ்கு ஒரு பொட்டலம் சுண்டல் கொடுக்கிறான்...]
சுண்டல் பையன்: "அண்ணே, சுடல் வாங்கிகோங்க..."
நான்: "வேண்டாம்பா"
அவன்: "அண்ணே அவன் சும்மா கொடுப்பான்... வாங்கிகோங்க.."
நான்: "அதுல வேண்டாம்பா..."
அவன் (சுண்டல் பையனிடம்): "டேய் கொடுடா..." (அந்த பையன் சிறுது தயங்க....) "நான் காசு கொடுக்கிறேன்.. அவருக்கு சுண்டல் கொடுடா "
நான்: (அவன் காட்டிய விருந்தோம்பலில் விளைவாக...) "சரி டா நான் வாங்கிக்கிறேன்..."(5 ரூபா கொடுத்து வாங்கினேன்..)
விட்டுகொண்டே அவனிடம் பேசிகிட்டு இருந்தேன்...
கடற்கரையில் காற்று எல்லை அதனால் பட்டம் சரியாக பறக்கவில்லை என்று சலித்துக்கொண்டான்...
நான் சுதந்திர தினத்தன்று வந்தேன் என்றல், என்னை கடலுக்கு அவன் வீட்டு படகில் கடலுக்கு அழைத்து செல்வதாக சொன்னான்....
கடலில் இருந்து கரை நோக்கி வீசும் காற்று "தொண்டை காற்று" என்றம்..
அது குளிராக இருக்கும் என்றும்.. அதுதான் இப்போது வீசுகிறது என்றும்...
அதனால் பட்டம் உயரே பறக்கவில்லை என்றான்...
தென் திசையை நோக்கி "அங்கிஇருந்து வீசும் காற்று வடக்கு காத்து... அது வந்தா நாலா இருந்கும்..." என்றான்...
எது என்னோட ஏரியா, நீங்க லீவு நாலா வந்த என்ன இங்க பார்க்கலாம்....
இப்படி 15 நிமிடங்கள் கழிய... தீடிர் என என் நண்பர் ஒருவனை பார்க்க அவனிடம் பேச நான் சிறுதூரம் தள்ளி போயி இருந்தேன்.....
அப்போது ஒரு காவலர் ஒரு தடியோடு எங்களை கடந்து சென்றார்... ஏதோ சுற்று காவல் என நினைத்து நாங்கள் பெருசா எதுவும் கண்டுகாமல் பேசி இருந்தோம்... அந்த காவல் துறை நாய் கவ்வ சென்றது அந்த பட்டங்களை என்று நான் அப்போது அறியவில்லை...
அந்த காவலர் நேராக போய், ஷாநவாஸ்இன் காலில் தன் தடியால் ஒரு தட்டுதட்டிவிட, அவனோ பயத்தில் ஓட, இவர் பொறுமையாக, அங்கு வைக்கபட்டுஇருந்த ஒவ்வரு பட்டத்தையும் தடியால் அடித்து சிதைத்தார்... பின்பு ஷாநவாசை அழைத்து, பையை திறக்க சொல்லி அதில் இருந்த விற்பனைக்காக வைக்க பட்டிஇருந்த 5-6 பட்டங்களையும் கிழித்தார்... நூல்கண்டுகளை எடுத்து மணலில் போட்டு காலால் மிதித்துப் பொதைத்தார்... பின்பு தூரத்தில் தெரிந்த இன்னொரு பட்டம் விற்கும் பையனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்..
இது நடந்து முடிந்ததும் நானும் என் நண்பனும் ஷாநவாஸ்இடம் சென்று (எப்படி என்ன பேசுவது என்று மனதில் நினைத்துக்கொண்டு)
"இங்கு பட்டம் விற்க கூடாதுன்னு உனக்கு தெரியாதா?" என்றேன்...
அவனோ,
"இவர இப்போம்தான் முதல பார்க்குறேன்...."
"எனக்கு நஷ்டம் ஒன்னும் இல்லனே...."
"நான் இதுக்கெல்லாம் பயப்படமட்டே..."
"எங்க மாமா Chirman அவர்ட சொல்லி இவர் வேலைய காலி பண்ணிவிடுவே...." என்று வேக வேகமாக பேசிவிட்டு, தொலைவில் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் தன் அண்ணனை பார்க்க சென்றுவிட்டான் ....
இதை எல்லாம் பார்த்துவிட்டு என் ஊருளுந்தில் வீடு திரும்பும்போது என் மனதில் எழுந்த வினாக்கள் ...
- அங்கு பல பஜ்ஜி போண்டா, பலூன், மீன் மற்றும் பல கடைகள் இருந்தும் ஏன் அந்த காவலர் இந்த பட்டம் விற்கும் சிறுவர்களை மட்டும் துரத்த வேண்டும்?
என்ன சொல்றதுன்னு தெரியல,.. ஆனா அந்த பட்டம் மட்டும் கண்ணுல நிக்குது,,..
ReplyDeleteமுதல் பதிவு அட்டகாசம்,..
please remove word verification,..
ReplyDeleteஅருமையான முதல் பதிவு
ReplyDeleteஇதுபோல் மேலும் எழுதிவர வாழ்த்துக்கள்
பட்டம் விடும் போது , மாஞ்சா யார் கழுத்திலும் பட்டு , காயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ReplyDeleteஆனாலும் அந்த காவலர் நடந்து கொண்ட முறை முற்றிலும் தவறானது.
நன்றி
சமரன்
உருக்கமான இடுகை. பட்டம் விற்பது தவறென்றால் காவல்துறை லஞ்சம் வாங்குதல் சரியாமோ? களையப்பட வேண்டய குற்றங்கள் களையப்படட்டும். பிறகு சிறுவர்களை அடிக்கலாம்.
ReplyDeleteஸ்ரீ....
உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் நன்றி.. இது என்னை மேலும் எழுத தூண்டுகிறது..
ReplyDeleteஜோதி அவர்களே "word verification" என்ற என்ன?
உங்களின் சுய விளம்பரபக்கத்திர்கு சென்று, முகப்பிற்கு செல்லுங்கள். நீங்கள் டாஸ்போர்டை அடைவீர்கள்.அங்கிருந்து அமைப்புகளுக்கு சென்றால் "கருத்துகளுக்கு சொல் சரிபார்ப்பைக் காண்பிக்க வேண்டுமா?" தெரியும். அதை இல்லை என மாற்றுங்கள்.
ReplyDeleteஎனக்கும் இதே பிரச்சனை வந்தது. நண்பர் ஒருவர் சொன்னபின் தான் நானும் எடுத்துவிட்டேன். உங்களின் பதிவு யூத்புல் விகடனில் வந்துள்ளது. வாழ்த்துக்கள்.
http://youthful.vikatan.com/youth/index.asp
அருமையான பதிவு, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்ததற்க்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//"எங்க மாமா Chirman அவர்ட சொல்லி இவர் வேலைய காலி பண்ணிவிடுவே...." //
ReplyDeleteஒரு ரவுடி எப்படி உருவாக்கப்படுகிறான் எனக் பையன் கோணத்தில் கவனித்தீர்களா???
மிக அழகான தெளிவான பதிவு
ReplyDeleteமுதல் முயற்சி மாதிரியே தெரியவில்லை
வாழ்த்துக்கள் பாலா
-சரவணகுமார்
arumai
ReplyDeleteதலைப்பும் அருமை; பதிவும் அருமை. விகடனில் இடம்பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜோதி, word verification ஐ எடுத்து விட்டுட்டே.... விகடன்ல இந்த பதிவு வந்தது மிக்க எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கு
ReplyDeleteNandri sankar, saravaranakumar, umakanth and Uzhavan...